திருவண்ணாமலை ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் பூஜை
ADDED :3485 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நரசிம்மருக்கு, நேற்று முன்தினம் மாலை, சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள், எடைக்கு எடை நாணயம் மற்றும் வெல்லம் வழங்கியும், முடி காணிக்கை செலுத்தி, நேர்த்தி கடன் செலுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.