திருவெண்காடு சுவேதாரன்யேசுவர சுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் நால்வரால் பாடப்பட்ட ஸ்ரீ பிரமவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவர சுவாமி கோயில் உள்ளது.
இத்தலம் காசி க்கு சமமான 6 தலங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் சிவமூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் மும்மூன்றாக அமைந்துள்ளன. ஆதி சிதம்பரம் என்றழைக்கப்படும் இத்தலத்தில் சிவபெருமா ன் சாந்தகுணமாக 9 தாண்டவங்களை ஆடியுள்ளார். சிவபெருமானின் 64 மூர்த்தி பேதங்களுல் ஒன்றான ஸ்ரீ அகோரமூர்த்தி இங்கு மட்டுமே உள்ளார். சக்தி பீடங்களில் 59வது பீடமா கும். பிரம்ம சமாதி இங்குள்ளது. இத்தலத்தில் சுவாமியை இந்திரன், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி முதலானோர் வழிபட்டுள்ளனர்.
இக்கோயிலில் நவகிரகங்களில் ஸ்ரீ புதன் பக வான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த நான்காம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு நேற்று காலை 8ம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து மஹா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. 9 மணிக்கு கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. 10:15 மணிக்கு வேதமந்திரங்கள் ஓத சர்வசாதகம் தெ ட்சணாமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையிலானோர் சுவாமி, அம்பாள், அகோரமூர்த்தி உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
தொடர்ந்து சுவாமி, அம்பாள், அகோரமூர்த்தி, காளி அனைவருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்திவைக்கப்பட்டன. பூஜைகளை பட்டாபிராம குருக்கள் தலை மையில் கோயில் அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர். இதில் கலெக்டர் பழனிசாமி, இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நமச்சிவாயா என கோஷமிட்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை 7 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு அகோரமூர்த்தி வீதி உலாவும் நடைபெறுகிறது. சீர்காழி டிஎஸ்பி. வெங்க டேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் முருகையன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.