பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3549 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அரையாளம் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று
முன்தினம், கணபதி பூஜையுடன் யாக சாலை பூஜை துவங்கப்பட்டது. நேற்று காலை, புனிதநீர்
கொண்டு, ராஜகோபுரம், பொன்னியம்மன், பாலவிநாயகர், பாலமுருகர், நவகிரக மூர்த்திகளுக்கு,
அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது.