நடைபாதையில் அன்னதானம் சிவகாசியில் சிரமத்தில் பக்தர்கள்
ADDED :3501 days ago
சிவகாசி:சிவகாசியில் கோயில் நடைபாதையில் அன்னதானம் நடப்பதால் பக்தர்கள் சிரமத்தில் உள்ளனர்.
சிவகாசியில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான விசுவநாதசுவாமி, விசாலாட்சி அம்மன் கோயில் உள்ளது. இங்கு அன்னதானம் வழங்க போதிய இட வசதி இல்லை. கோயில் நடைபாதையில் தற்காலிக நாற்காலி, மேஜைகளை போட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது. வியாழன், சனிக்கிழமை, பிதோஷ தினங்களில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இந்நேரங்களில் நடைபாதையில் அன்னதானம் வழங்கப்படுவது பக்தர்களுக்கு
இடை யூறை ஏற்படுத்துகிறது. அறநிலைத்துறை அதிகாரிகள் பக்தர்களுக்கு இடையூறு தராத
வகையில் அன்னதானம் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும். கோயில் அலுவலக தெற்கு
புறம் குறைந்த வாடகைக்கு விடப்பட்டுள்ள கோயில் இடத்தை அன்னதான மண்டபமாக
மாற்றினால் பக்தர்கள் சிரமம் குறைய வாய்ப்பு உள்ளது.