உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மரகத சாயிபாபா மையத்தில் 32 மணிநேர பஜனை

மரகத சாயிபாபா மையத்தில் 32 மணிநேர பஜனை

சென்னை: மேற்கு மாம்பலம், பச்சை நிற மரகத சாயிபாபா தரிசன மையத்தில், 32 மணிநேர இடைவிடாத அகண்ட சாயிநாம கீதங்கள் நிகழ்த்தப்பட உள்ளன. தமிழ் புத்தாண்டு மற்றும் ராமநவமி பண்டிகையை ஒட்டி நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, இன்று காலை 6:00 முதல், நாளை பிற்பகல், 2:00 மணி வரை நடக்க உள்ளது. மாலை, 6:00 மணிக்கு, அகண்ட சாயிநாம நிறைவு சாயிபாபா மாலை ஆரத்தி நிகழ உள்ளது. மாலை 6:30 மணிக்கு, ஸ்ரீசாயிமார்க்கம் ஆசிரியர் லட்சுமி நரசிம்மன், ஸ்ரீராமநவமி அறிமுக உரை நிகழ்த்துகிறார். மாலை 7:00 முதல், 8:00 மணி வரை, மூத்த பத்திரிகையாளர், சுதாங்கன், பேசுகிறார். இரவு 10:00 முதல், நள்ளிரவு 1:00 மணி வரையும், 15ம் தேதி காலை 8:00 மணி முதலும், என்.எஸ்.நடராஜன் மற்றும் பாகவதர்கள் பங்குபெறும், டோலோத்ஸவம், திவ்யநாம பஜனைகள் நடக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !