திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் மாலோல பவனம் எழுந்தருளள்!
ADDED :3565 days ago
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் தமிழ் புத்தாண்டு அன்று காலை 8.30 மணிக்கு உற்சவரான கல்யாண ஜெகநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியாருடன் அருகில் உள்ள மாலோல பவனத்திற்கு எழுந்தருள உள்ளனர். விஷேச திருமஞ்சனம் செய்விக்கப்பட்டு, மாலையில் நடக்கும் சிறப்பு பூஜைகள், கோஷ்டி, பிரபந்தசாற்றுமுறை பாராயணங்களுடன் பூ பல்லக்கில் வீதியுலா நடைபெற உள்ளது. மறுநாள் ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு தர்ப்பசயன ராமர் சன்னதியில் திருமஞ்சன பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்கின்றனர்.