உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவில் செடல் மகோற்சவ விழா

முத்துமாரியம்மன் கோவில் செடல் மகோற்சவ விழா

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி மீனாட்சிப் பேட்டை ரமணபுரம் முத்துமாரியம்மன் கோவில் செடல் மகோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து குதிரை விடுதல் நிகழ்ச்சி நடந்தது. வரும் 17ம் தேதி கரகம் வீதியுலா நடக்கிறது. 18ம் தேதி முதல் 20 ம்தேதி வரை தினமும் இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது. 20ம் தேதி இரவு 8 மணிக்கு முத்து பல்லக்கில் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான செடல் திருவிழா 22ம் தேதி காலை 7 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளுடன் துவங்குகிறது. தொடர்ந்து பொறி சட்டி எடுத்தல், சக்தி கரக வீதியுலா நடக்கிறது. 12 மணிக்கு நடக்கும் செடல் திருவிழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். 23ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 24ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !