உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் இந்துமுன்னணி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

பழநியில் இந்துமுன்னணி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

பழநி:பழநி இந்து முன்னணியினர் பால்குடம் எடுத்து பழநியாண்டவருக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்ட பொதுசெயலாளர் ஜெகன் தலைமை வகித்தார். மாநில தலைவர் சுப்ரமணியன், செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர். 2020ம் ஆண்டிற்குள் ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் இந்துமுன்னணி கமிட்டி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பழநி 20 ஊராட்சிகள், 3 பேரூராட்சிகளில் மொத்தம் 45 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி செலுத்தும் விதமாக இந்து முன்னணியினர் பால்குடங்கள் எடுத்து பாலசமுத்திரம் ரோடு, அடிவார ரோட்டில் ஊர்வலமாக வந்து மலைக்கோயில் மூலவர் ஞானதண்டாயுத பாணிசுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். மேற்கு மாவட்டசெயலாளர் பாலு, பழநி ஒன்றியசெயலாளர் கார்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !