உழைக்கும் கைகள்
ADDED :5249 days ago
மதுரை மாவட்டம் பேரையூர் அருகிலுள்ள பூலாம்பட்டி மத்தங்கரையில் உள்ள விநாயகர் கோடரி ஏந்திய நிலையில் உள்ளார். உழைப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் இவர் கோடரி ஏந்தியுள்ளார். ஒரு மரத்தையே கோடரி சுள்ளிகளாக நொறுக்குவது போல், இவர் பக்தர்களின் குறைகளை அடித்து நொறுக்குபவராக உள்ளதால், இந்த ஆயுதம் வழங்கப்பட்டுள்ளது.