செல்லமுத்து மாரியம்மன் கோவில் தீ மிதிவிழா
ADDED :3511 days ago
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பச்சுடையாம்பாளையம் செல்லமுத்து மாரியம்மன் கோவில் தீ மிதிவிழா நேற்று இரவு நடந்தது. இதில், 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர். இன்று பொங்கல் வைத்து, கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நாளை, காளியம்மன் கோவில் பண்டிகையும் நடக்கவுள்ளது. சனிக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.