உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தேனி: தேவாரத்தில் யாதவர்கள் சமுதாய குலதெய்வமான காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதபட்டர் நடத்தி வைத்தார். இதன்பின் சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தேவாரம் ஜமீன்தார் தங்கப்பாண்டியர்,ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் கோபால்சாமி, ஆசிரியர் மணிராஜா, சீதாராம் ஓமியோபதி கிளினிக் டாக்டர் நாராயணன் குழுவினர் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக ஓய்வு ஆசிரியர் முருகேசன் ஆலோசனைப்படி சிற்பி முத்துகிருஷ்ணன் நிர்மான வேலைகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !