ரமணபுரம் கோவிலில் 22ம் தேதி செடல் விழா
ADDED :3511 days ago
புதுச்சேரி: மீனாட்சிபேட்டை ரமணபுரம் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா, வரும் 22ம் தேதி நடக்கிறது. செடல் திருவிழா, கடந்த 11ம் தேதி குதிரை விடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. வரும் 17ம் தேதி கரகம் வீதி உலா, 18, 19 மற்றும் 20ம் தேதிகளில் அம்மன் வீதி உலா நடக்கிறது. 21ம் தேதி, இரவு 8:00 மணிக்கு முத்துப் பல்லக்கு உற்சவம் நடக்கிறது. 22ம் தேதி, காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பொரிசட்டி எடுத்தல், சக்தி கரகம் வீதி உலா, பகல் 12:00 மணிக்கு செடல் திருவிழா நடக்கிறது. 23ம் தேதி இரவு மஞ்சள் நீராட்டு விழா, 24ம் தேதி ஊஞ்சல் உற்வசம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.