அண்ணாமலையார் கோவிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், துர்கா ஸ்டாலின் வழிபாடு செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், பத்து நாட்கள் நடக்கும் வசந்த உற்சவ விழா, நேற்று முன்தினம் துவங்கியது. இதில், நேற்று இரவு நடந்த விழாவில், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் தல விருட்சமான மகிழமர வீதி உலா வரும் நிகழ்ச்சியும், பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது, தி.மு.க, பொருளாளர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், வசந்த உற்சவ விழாவில் மகிழமரம் வலம் வரும் போது அம்மனை தரிசனம் செய்தார். மூலவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து, நவக்கிரக சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டார். அப்போது, கோவில் சிவாச்சாரியார்கள் அவருக்கு பிரசாதம் வழங்கி மரியாதை செலுத்தினர். துர்கா ஸ்டாலின் ரகசியமாக கோவிலுக்கு வந்து செல்வதை யாரும் போட்டோ எடுத்து விட கூடாது என்பதற்காக, தி.மு.க.,வினர் தீவிரமாக கண்காணித்தனர்.