சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்!
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று தமிழ்ப் புத்தாண்டையொட்டி உற்சவர் பெருமாள் கோதண்டராமர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணிக்கு சுப்ரபாதம், 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 9:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், 9:30 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீராமர், சீதை, லட்சுமணன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, பிற்பகல் 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது. இன்று (15ம் தேதி) ராம நவமியை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ராமர், சீதை, லட்சுமணன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.