உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவராக சுவாமி கோவிலில் சித்திரை உற்சவ கொடியேற்றம்!

பூவராக சுவாமி கோவிலில் சித்திரை உற்சவ கொடியேற்றம்!

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயில் சித்திரை உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. நிகழ்ச்சியையொட்டி, அதிகாலை மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து 16 நாட்களுக்கு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் இரவு  உற்சவ மூர்த்தி யக்ஞ வராகன், ஸ்ரீதேவி, பூமிதேவியோடு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வுகளாக நாளை (16ம் தேதி) தங்க கருட சேவை, 17ம் தேதி சேஷ வாகனம், 18ம் தேதி அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.  20ம் தேதி காலை தேர்த் திருவிழா,  22ம் தேதி மதியம் மட்டையடி உற்சவம், இரவு தெப்பல் உற்சவம் நடக்கிறது. 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் மதனா மற்றும் முக்கிய பிரமுகர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !