வெடி வழிபாடு ஆசாரங்களுக்கு உட்பட்டது: சபரிமலை தந்திரி!
ADDED :3508 days ago
சபரிமலை,:கோயில்களில் வெடி வழிபாடு நடத்துவது ஆசாரங்களுக்கு உட்பட்டது, என்று சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு கூறினார் .இதுகுறித்து அவர் கூறியதாவது: விழா காலங்களில் வாண வேடிக்கை நடத்துவது என்பது அந்த விழாவுடன் தொடர்புடையது மட்டுமே. இதற்கும் கோயில் ஆசாரத்துக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் சபரிமலையில் நடைபெற்று வரும் வெடி வழிபாடு கோயில் ஆசாரங்களுக்கு உட்பட்டது. அதை தடையின்றி நடத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.