உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ் புத்தாண்டு: கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு!

தமிழ் புத்தாண்டு: கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு!

கோவை: சித்திரை மாத பிறப்பையொட்டி கோவையிலுள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஈச்சனாரி விநாயகர் கோவிலில், அதிகாலை 4:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்தையடுத்து, மலர்மாலைகள், தங்ககவசம், கிரீடம் அணிவித்து, குங்குமஅலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தீபாராதனை மற்றும் சிறப்பு வழிபாட்டுக்கு, காலை 5:00 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர். கணபதி ேஹாமம் கோவில் வளாகத்தில் நடந்தது. சித்திரை பிறப்பையொட்டி காலை, மாலை என இரு வேளைகளில் கோவிலில் தங்கத்தேர் கோவிலை வலம் வந்தது.

கோவில் மண்டபத்தில் கவிதாசன் நடுவராக பங்கேற்ற சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. வளம்பெற வலிமை சேர்ப்பது உறவா, நட்பா என்ற தலைப்பில், உறவே என்ற தலைப்ில் செந்தமிழ்ஜெகன்நாதன், நற்றமிழ் நாயகி கோமதி, நட்பே என்ற தலைப்பில் கலைக்கவிஞர் கோட்டீஸ்வரன், வைகறை பூங்கொடி ஆகியோர் பேசினர். நிகழ்ச்சிகளை செயல்அலுவலர் சரவணன் ஒருங்கிணைத்திருந்தார். கோவில் சார்பில் சிறப்பு அன்னதானம், பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது. இது தவிர கோவில் பணியாளர்கள் சார்பில், சிறப்பு அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

ஈச்சனாரி மகாலட்சுமி மந்திர் கோவிலில், துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியருக்கு, மலர் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவில் கருவறையில் தண்ணீரால் நிரப்பி நீர்தடாகம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் தாமரை இலைகளை பரப்பி அதில் அல்லி மலர்களையும் தாமரை மலர்கள் மற்றும் வெள்ளை தாமரைகளை மிதக்கவிடப்பட்டு, அழகு படுத்தப்பட்டிருந்தது.  துர்கை, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் வெள்ளி அங்கி அணிவிக்கப்பட்டு, மலர்மாலை சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள், தமிழ்புத்தாண்டான நேற்று முப்பெரும் தேவியரை வழிபட்டனர்.

புலியகுளம் முந்திவிநாயகர் கோவிலில், சுவாமிக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளை நிறைவு செய்து, சுவாமிக்கு சாகம்பறி அலங்காரம் செய்யப்பட்டிருந்து, மலர்மாலைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் கனிவகைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.  ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசி்த்தனர். வழிபாட்டிற்கு வந்த பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.  ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள், பெரியகடைவீதி கோனியம்மன், வைசியாள்வீதி கன்னிகாபரமேஸ்வரி, உக்கடம் நரசிம்மர் கோவிலில் சிறப்ப வழிபாடுகள் சித்திரை பிறப்பையொட்டி நடந்தன ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். வீடுகளில் முக்கனிகள், ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள், மஞ்சள்கொன்றை பூக்களை கண்ணாடி முன்பு பிரதிபலிக்கும் வகையில் வைத்து சுவாமியை வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !