திருக்கோவிலுார் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :3506 days ago
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தமிழ் வருடபிறப்பை முன்னிட்டு திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ.‚ நகர் சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 6:00 மணிக்கு ஆஞ்சநேயர்க்கு சிறப்பு அபிஷேகம், சந் தனகாப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. உலகளந்த பெருமாள் கோவிலில் காலை 11:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெரு மாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்‚ அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபி÷ ஷகம், தீபாராதனை நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில் சோட சோபவுபச்சார தீபாராதனை நடந்தது. திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர் மகாசக்தி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், சக்தி விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.