உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை!

ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை!

கடலுார்: தட்டாம்பாளையம் ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நடந்தது.  பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையம்  ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வடை மாலை, துளசி மாலை சாத்தப்பட்டு  தீபாராதனை நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா  நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !