திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலில் ராம நவமி உற்சவம்
ADDED :3506 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலில் ராம நவமி உற்சவம் நடந்தது. நேற்று காலை மகா சுதர்சன ஹோமம், சிறப்பு பூஜைகள் முடிந்து உற்சவர்கள் ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசம் சாத்துப்படியானது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம் நடந்தன. விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் ராமர், சீதை, லட்சுமணனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.