உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை சாய் ஜெயந்திவிழா துவக்கம்

வால்பாறை சாய் ஜெயந்திவிழா துவக்கம்

வால்பாறை : வால்பாறை ஸ்ரீசாய் ஜெயந்தி இரண்டாமாண்டு விழா நடந்து வருகிறது. வால்பாறை துவாரகாமாயி அறக்கட்டளை சார்பில், இவ்விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வால்பாறை நகராட்சி கமிஷனர்(பொ)ராஜகோபால், டாக்டர் முனுசாமி ஆகியோர் திருக்கொடியை ஏற்றினர். விழாவில் நேற்றுமுன்தினம் மாலை, 6:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவாளர் விஜயகுமார், பக்தி சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து இரவு, 7:00 மணிக்கு வால்பாறை பட்டர்பிளை நாட்டியாஞ்சலி சார்பில் பள்ளி மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சி இடம் பெற்றது. நேற்று மாலை ஸ்ரீஷீரடிசாய்பாபா பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !