உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பந்தலுார் முத்துமாரியம்மன் தேர் திருவிழா!

பந்தலுார் முத்துமாரியம்மன் தேர் திருவிழா!

பந்தலுார்: பந்தலுார் அருகே, சேரங்கோடு டான்டீயில், நடந்த தேர் திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பந்தலுார் அருகே, சேரங்கோடு டான்டீ சரக எண் ஒன்றுக்கு உட்பட்ட முத்துமாரியம்மன் கோவில், 45ம் ஆண்டு தேர் திருவிழா நடந்தது.  16ம்தேதி காலை ஏலமன்னா நீர் தேக்கத்திலிருந்து பால்காவடி, பறவை காவடி, பூ காவடி மற்றும் அக்னிச்சட்டி, அக்னிக்காவடி ஊர்வலம் நடந்தது. 17ம் தேதி காலை,7:00மணிக்கு அபிஷேக ஆராதனைகள், மாவிளக்கு பூஜை, மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெற்றது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !