வீரட்டானேஸ்வரர் வசந்தோற்சவ விழா
ADDED :3502 days ago
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில் வசந்தோற்சவ விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை மூலமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷகம், அலங்காரம் நடந்தது. மாலை மணிக்கு பஞ்சமூர்த்திகள் மகா தீபாராதனை நடந்தது. ஆனந்தவள்ளி சமேத சந்திரசேகரரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில், சிறப்பு தீபாராதனை நடந்தது.