உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலுார் ராம மந்திரத்தில் சீதா கல்யாண உற்சவம்

சூலுார் ராம மந்திரத்தில் சீதா கல்யாண உற்சவம்

சூலுார்: சூலுார் ராம மந்திரத்தில் நடந்த சீதா கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சூலுார் ராம மந்திரத்தில் கடந்த,  13ம் தேதி ராம நவமி மஹோத்சவ விழா துவங்கியது. தினமும் இன்னிசை கச்சேரி, பஜனை, பாராயணங்கள் நடந்தன. நேற்று முன்தினம் காலை வேங்கடேச சுப்ரபாதம், உபநிஷத் பாராயணமும், ஜெயதேவரின் அஷ்டபதி பஜனையும், மாலையில் திவ்ய நாம பஜனையும் நடந்தன.நேற்று காலை 7:30 மணி முதல் உஞ்சவிருத்தி பஜனை ஊர்வலம் நடந்தது. காலை,9:00 மணிக்கு துவங்கிய சீதா கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிறுவர், சிறுமியர் சீதா, ராமர்,லட்சுமணர் வேடமணிந்து பக்தர்களை பரவசப்படுத்தினர். தொடர்ந்து, ஆஞ்சநேய உற்சவம் முடிவுற்று பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !