உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்:ஒரு லட்சம் பேருக்கு விருந்து

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்:ஒரு லட்சம் பேருக்கு விருந்து

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 30 ஆயிரம் பேருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்படவுள்ளது. ஒரு லட்சம் பேருக்கு விருந்தும் அளிக்கப்படுகிறது.கோயிலில் திருக்கல்யாணம் நாளை நடக்கிறது. கோயில் சார்பில் 30 ஆயிரம் பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள் கிழங்கு, குங்குமம், விபூதி, பிஸ்கட், தண்ணீர் பாக்கெட் ஆகியவை துணிப்பையில் வைத்து பிரசாதமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருக்கல்யாண நிகழ்ச்சிகளை பேராசிரியை சாரதாநம்பி ஆரூரான் தொகுத்து வழங்குகிறார்.

பாவாடை நெய்வேத்தியம்: திருக்கல்யாணம் முடிந்து பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமிக்கு வலப்புறம் குண்டோதரன் சுவாமி உள்ளார். அனைத்து உயிரினங்களின் பசியை தீர்க்கும் வண்ணம் திருக்கல்யாண விருந்தாக குண்டோதரனுக்கு பாவாடை நெய்வேத்தியம் எனும் மெகா படையல் கோயில் சார்பில் செய்விக்கப்படும்.

திருக்கல்யாண விருந்து: திருக்கல்யாணத்தை முன்னிட்டு சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் ஒரு லட்சம் பேருக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்படுகிறது. இதற்காக பள்ளி வளாகத்தில் 12 ஆயிரம் சதுரடி பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. காலை 8.00 முதல் மாலை 5.00 மணி வரை விருந்து நடக்கிறது.பள்ளியின் ரமணா ஹாலில் இன்று (ஏப்.,18) மதியம் 2.00 மணிக்கு விருந்துக்கான காய்கறி வெட்டும் பணி துவங்குகிறது. இச்சேவையில் ஈடுபட விரும்பும் பெண் பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்து காய்கறிகள் வெட்டும் அரிவாள் மனை அல்லது கத்தியுடன் நேரில் வந்து உதவிடலாம். இன்று மாலை மாப்பிள்ளை அழைப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !