உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரகுப்தர் கோவிலில் 20ல் திருவிழா துவக்கம்

சித்ரகுப்தர் கோவிலில் 20ல் திருவிழா துவக்கம்

திருப்பூர் : சின்னாண்டிபாளையத்தில் உள்ள சித்ர குப்தர் கோவிலில், 87ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா, வரும், 20ல் துவங்குகிறது. திருப்பூர் மங்கலம் ரோடு, சின்னாண்டிபாளையத்தில், எமதர்மனின் கணக்கர் எனப்படும் சித்ர குப்தருக்கு, தனி கோவில் உள்ளது. இங்கு, தலைப்பாகையுடன், வலது கையில் எழுத்தாணி, இடது கையில் பனை ஓலையுடன், கணக்கு எழுதும் கோலத்தில், சித்ர குப்தர் வீற்றிருக்கிறார். காஞ்சிபுரத்தில் உள்ள சித்ர குப்தர் கோவிலுக்கு அடுத்ததாக, இக்கோவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. சித்ர குப்தர் அவதரித்த சித்ரா பவுர்ணமி நாளில், ஆண்டுதோறும் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு, 87ம் ஆண்டு விழா, வரும், 20ல் துவங்குகிறது. அன்று மாலை, 6:00க்கு சித்ர குப்தர் வீதி உலா, பால் குட ஊர்வலம், அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 21ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு, கணபதி ஹோமம்; காலை, 7:31க்கு, சித்ர குப்தர் மூல மந்திர யாகம்; திரவிய யாகம், பட்டு வஸ்திர பூர்ணாஜஹுதி, தீபாராதனை; காலை, 8:30 மணிக்கு, சித்ர குப்தருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சித்ர குப்தர் புராணம் வாசித்தல் உள்ளிட்டவை நடைபெறும். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !