ஆஞ்சநேயர் கோவிலில் கர்நாடக இசைக்கச்சேரி!
ADDED :3500 days ago
விழுப்புரம்: விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் கர்நாடக இசைக் கச்சேரி மற்றும் பரத நாட்டியம் நடந்தது. விழுப்புரம் திரு.வி.க., வீதி ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா கடந்த 10ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் விழுப்புரம் தர்ஷிணி இசைப்பயிலகம் மஞ்சு கண்ணன் தலைமையிலான மாணவிகளின் கர்நாடக இசைக் கச்சேரி நடந்தது. தொடர்ந்து நட்டுவாங்க கலைமணி ராதை தலைமையில் பரதநாட்டியம் நடந்தது. இதில், கோவில் பரம்பரை அறங்காவலர் குமார், செயல்அலுவலர் முத்துலட்சுமி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.