உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புற்று கருமாரியம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேக விழா!

புற்று கருமாரியம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேக விழா!

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி சுப்பையா நகர் தேவி புற்று கருமாரியம்மன் கோவி லின் 32வது ஆண்டு 108 பால்குட அபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக காலை 5:00 மணி சுந்தர விநாயகருக்கு அபிஷேகமும், காலை 10:00 மணிக்கு தேவி புற்று கருமாரியம்மனுக்கு அபிஷேகமும், கரகங்கள் புறப்பாடு நடந்தது. பகல் 12:00 மணிக்கு பால் குடங்கள் புறப்பாடு நடந்தது.  முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் பகல் 1:00 மணிக்கு கோவிலை அடைந்தது. அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதி உலா வும், ஊஞ்சல் உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !