உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்காலில் ரூ.15 லட்சத்தில் மேற்கூரை அமைக்கும் பணி!

காரைக்காலில் ரூ.15 லட்சத்தில் மேற்கூரை அமைக்கும் பணி!

காரைக்கால்: திருநள்ளார் நளன் குளம் விநாயகர் கோவில் முன்பு பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய ரூ.15 லட்சம் மதிப்பில் மேற்கூரை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. திருநள்ளார்  தர்பாரண் யேசுவரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனீஸ்வர பகவானை தரிசிப்பதிற்கு முன்னதாக, பக்தர்கள் நளன் குளத்தில் புனித நீராடி அங்குள்ள விநாய கரை வழிப்பட்டு, திருஷ்டி தேங்காய் உடைப்பது வழக்கம். விநாயகர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசை யில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக, விநாயகர் கோவில் முன்பு ரூ. 15 லட்சம் செலவில், 600 மீட்டர் நீளத்திற்கு நிரந்த மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் கூறுகையில், வெயில் காலங் களில் பக்தர்களின் வசதிக்காக விநாயகர் கோவில் முன்பு, தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டு வந்தது. தற்போது, கோவில் நிர்வாகம் சார்பில் நிரந்தர மேற்கூரை அமைக்கும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !