சித்திரை திருவிழாவுக்கு வைகை நீர் இன்று திறப்பு
ADDED :3500 days ago
தேனி; மதுரை சித்திரை திருவிழாவிற்காக, வைகை அணையில் இருந்து, இன்று, வினாடிக்கு, 1,500 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.மதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, 22ல் நடைபெற உள்ளது. வைகை அணை நீர் மட்டம் குறைவாக இருப்பதால், இத்திருவிழாவுக்கு நீர் திறக்கப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.இந்நிலையில் இன்று, வினாடிக்கு, 1,500 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது; 24 மணி நேரத்திற்கு இதே அளவில் நீர் வெளியேற்றப்படும். நான்கு நாட்கள் பயணிக்கும் தண்ணீர், 22ம் தேதி அதிகாலை மதுரையை அடையும்.அணையின் நேற்றைய நீர்மட்டம், 35.70 அடியாக இருந்தது.