உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியநாயகியம்மன் கோயிலில் நாளை சித்ரா பவுர்ணமி துவக்கம்: ஏப்.,21ல் வெள்ளி ரதம்

பெரியநாயகியம்மன் கோயிலில் நாளை சித்ரா பவுர்ணமி துவக்கம்: ஏப்.,21ல் வெள்ளி ரதம்

பழநி: பழநி தைப்பூசவிழா நடைபெறும் பெரியநாயகியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா நாளை(ஏப்.,20) துவங்குகிறது. விழாவை முன்னிட்டு நாளை இரவு 8 மணிக்கு மேல் முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானையுடன், தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். ஏப்.,21ல் சித்ரா பவுர்ணமி அன்று பெரியநாயகியம்மன் கோயிலிருந்து காலை 6 மணிக்கு மேல், 108 பால்குடங்கள் திருஆவினன்குடி கோயிலுக்கு எடுத்துவருனர். காலை 9 மணிக்கு, மூலவர் குழந்தை வேலாயுதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு 8 மணிக்குமேல், முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன், வெள்ளி ரதத்தில் ரதவீதியில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. சித்திரை திருவிழாவில் மேற்குரதவீதியிலுள்ள லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் இன்று இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும், ஏப்.,21ல் காலை 7.15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.ஏற்பாடுகளை இணைஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !