உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

திருப்புத்துார்: கீரணிப்பட்டியில் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. இளையாத்தங்குடி கைலாசநாத சுவாமி நித்யகல்யாணி அம்மன் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில், பங்குனியில் 10 நாள் மகோற்சவம் பூச்சொரிதல் விழா நிறைவை அடுத்து நடைபெறும். கடந்த ஏப்.,10 மாலை இறையாத்தங்குடியிலிருந்து அம்பாள் புறப்பட்டு, கீரணிப்பட்டி கோயிலுக்கு வந்த பின்னர், நள்ளிரவில் காப்புக் கட்டி மகோற்சவம் துவங்கியது. தொடர்ந்து தினசரி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்பாள் திருவீதி வலம் வந்தார். நேற்று காலை 9.30 மணிக்கு அம்மன் அபிசேக,ஆராதனை நடந்து தேரில் எழுந்தருளினார். மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !