உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சமே பத்மாஸனித்தாயார் கோயிலில் உலக நன்மைக்காக 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று திருவிளக்கு வழிபாடு, மாங்கல்ய பூஜைகள் செய்தனர். கேந்திர திட்ட செயலாளர் ஐயப்பன் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் நகர் பொறுப்பாளர் பி.கே.மணி, கோயில் பேஷ்கார் கண்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர் செல்வராணி, நாகஜோதி, கோவிந்தம்மாள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !