பழநி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :3502 days ago
பழநி: பழநி மேற்குரத வீதி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு திருக்கல்யாணம் நடந்தது. சித்திரை திருவிழா ஏப்.,13ல் கொடியேற்றத்துடன் துவங்கி முதல் ஏப்.,22 வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்தை முன்னிட்டு லட்சுமிநாராயணப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க இரவு 7.40 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் லட்சுமிநாராயணப்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை( ஏப்.,21ல்) காலை 7.15 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. மாலை 6 - 7 மணிக்குள் நடக்கவேண்டிய திருக்கல்யாணம், இரவு 7.40 மணிக்கு திருக்கல்யாணம் நடந்ததால் பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.