உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல்லில் அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் திருக்கல்யாண கோலாகலம்

திண்டுக்கல்லில் அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் திருக்கல்யாண கோலாகலம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வர் திருக்கல்யாணம் பக்தர்கள் கூட்டத்தினிடையே கோலாகலமாக நடந்தது. திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.10,ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சுவாமி,அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடந்தது. திருவிழாவின் 10 நாளும் மாலையில் சுவாமி அம்பாள் வீதியுலா காட்சி வைபவமும் நடந்தது. நேற்று 10ம் நாள் விழாவின் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மாலை 5.30 மணிக்கு சுவாமிக்கு மாப்பிளை அழைப்பு நடந்தது. அதன்பின், மணமகள் அம்பாள் அழைத்து வரப்பட்டு பூஜைகள், தீபாரதனைகள் நடந்தன. அபிராமியம்மனுக்கும் சுவாமி பத்மகிரீஸ்வரருக்கும் திருக்கல்யாணம் வைபம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதமாக பூ, மஞ்சள், மஞ்சள் கயிறு, குங்குமம் வழங்கப்பட்டது. இரவில் சுவாமி அம்பாள் திருமண கோலத்தில் பூப்பல்லக்கில் வீதியுலா வந்தனர். கட்டளைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை சாமி தரிசனம் செய்தனர். பதினோறாம் நாளான இன்று தேரோட்டம் மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !