சித்தரேவு பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :3502 days ago
பட்டிவீரன்பட்டி: சித்தரேவு வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. சித்தரேவு வரதராஜபெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 7ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மண்டகப்படிதாரர்கள் சார்பில் தொடர்ந்து நேற்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்து. சீனிவாசன், ஜெயக்குமார் ஐயங்கார் திருக்கல்யாணத்தை நடத்தினர். ஏற்பாடுகளை செயல்அலுவலர் மாலதி, தக்கார் ராமசாமி, தலைமை கணக்காளர் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.