தேவி கருமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா!
குறிச்சி: செட்டிபாளையம் ரோட்டில், கிருஷ்ணா நகரிலுள்ள தேவி கருமாரியம்மன் கோவிலின், முதலாம் ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, சக்தி கரக ஊர்வலம் நேற்று நடந்தது. விழா நேற்று முன்தினம் அதிகாலை, மகா கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. மாலை, கம்பம் நடுதல், பூச்சாட்டுதல் நடந்தன. நேற்று காலை, சக்தி கரக ஊர்வலம், செட்டிபாளையம் ரோடு, அன்பு நகரிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலிலிருந்து துவங்கி, கோவிலை வந்தடைந்தது. அம்மன் சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, திருக்கல்யாணம், அன்னதானம் நடந்தன. இன்று காலை, 8:00 மணிக்கு பொங்கல் விழாவும், மாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு பூஜையும் நடக்கின்றன. நாளை காலை, 7:00 மணிக்கு, சிறப்பு மகா அபிேஷகமும், மதியம் அன்னதானமும், மாலை அம்மன் திருவீதி உலாவும் நடக்கின்றன. நிறைவு நாளான, 22 காலை, 8:00 மணிக்கு மறுபூஜை, மகா அபிேஷக அலங்காரம் நடக்கின்றன.