உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதுார் கோவிலில் லட்ச தீப திருவிழா

பாதுார் கோவிலில் லட்ச தீப திருவிழா

உளுந்துார்பேட்டை: பாதுார் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில்  லட்ச தீப திருவிழா நடந்தது. விழாவையொட்டி, காலை 9 மணிக்கு திருமஞ்சனம், 11.30 மணிக்கு ததியாராதனை, மாலை 3 மணிக்கு பஜனை நடந்தது. மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டு லட்ச தீப திருவிழா நடந்தது. வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு வடமாலை சாற்றப்பட்டு, தீபாராதனை நடந்தது. பின்னர் பெருமாள், வீரஆஞ்சநேயர் சுவாமி சிறப்பு அலங்காரத்துடன், கோவிலை வலம் வந்தது.  ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் விஜயராகவஅய்யங்கார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.  பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சம்பத், சம்பத்ஐயர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !