மானாமதுரையில் ஆனந்தவல்லி-சோமநாதர் திருக்கல்யாணம்!
ADDED :3502 days ago
மானாமதுரை: மானாமதுரையில் சித்திரை திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.8ம் நாளான நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தை ஒட்டி திருக்கல்யாண மண்டபத்தில் ஆனந்தவல்லி-சோமநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 11 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருமணமான பெண்கள் திருமாங்கல்ய கயிறு மாற்றி கொண்டனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருமண விருந்து வழங்கப்பட்டது. 9ம் நாள் திருவிழாவான தேரோட்டம் இன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.22ம் தேதி வெள்ளிக்கிழமை வீர அழகர் வைகைஆற்றில் எழுந்தருளுகிறார்.