வீரராகவர் கோவிலில் தேர் உற்சவம்
திருவள்ளூர் : திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு உற்சவர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 19ம் தேதி துவங்கியது. விழாவின் ஏழாவது நாளான நேற்று, தேர் உற்சவம் நடந்தது. உற்சவர் அதிகாலை, 4:30 மணிக்கு, திருத்தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பத்தி உலா, மாலை, 5:30 மணிக்கும், திருமஞ்சனம் இரவு, 7:30 மணிக்கும் நடந்தது. பின், இரவு, 10:30 மணியளவில் உற்சவர் தேரில் இருந்து கோவிலுக்கு எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.திருவள்ளூர், வீரராகவர் கோவிலை சுற்றியுள்ள குளக்கரை தெரு, பஜார் வீதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெறுவதால், தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பதிலாக கோவில் வளாகத்தில் தேர் நிறுத்தப்பட்டு, உற்சவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.