சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அன்னதானம்
ADDED :3502 days ago
ஈரோடு: சமயபுரம் மாரியம்மன் கோவில் விழா, 26ம் தேதி நடக்கிறது. ஈரோடு நடராஜ் தியேட்டர் அருகில் கம்பர் வீதியில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, 19வது ஆண்டாக சித்திரை திருவிழா நடக்கிறது. கடந்த, 12ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. முக்கிய நிகழ்வான காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், 26ம் தேதி காலை நடக்கிறது. அன்றைய தினம் அன்னதானம், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் கும்பம் எடுத்து சென்று காரை வாய்க்காலில் விடப்படுகிறது. மறுநாள் (27ம் தேதி) மாலை, 7 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.