திருமாமுடீஸ்வரர் கோவில் பிரமோற்சவ தேரோட்டம்
ADDED :3502 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, கலசப்பாக்கத்தில் திருமாமுடீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரமோற் சவத்தையொட்டி தேரோட்டம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் உள்ள திருமாமுடீஸ்வரர் கோவில் சித்திரை மாத பிரமோற்சவம், கடந்த, 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா ஆகியவை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், திரிபுர சுந்தரி உடனமர் திருமாமுடீஸ்வரர் தேரில் அலங்கரித்து, திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர்.