உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சத்திரம் அன்னபூரணி கோவில் கும்பாபிஷேகம்

புதுச்சத்திரம் அன்னபூரணி கோவில் கும்பாபிஷேகம்

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த அன்னப்பன்பேட்டை, அன்னபூரணி அம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், வரும் 22ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, நாளை (21ம் தேதி) காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமத்துடன் பூஜைகள் துவங்குகிறது. தொடர்ந்து, 22ம் தேதி, காலை 6:00 மணிக்கு, கோ பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, 9:30 மணிக்கு, கடம் புறப்பாடாகி, 10:00 மணிக்கு, அன்னபூரணி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !