வண்ணாத்துார் திரவுபதி அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் !
ADDED :3502 days ago
விருத்தாசலம்: வண்ணாத்துார் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (21ம் தேதி) நடக்கிறது. வேப்பூர் அடுத்த வண்ணாத்துார் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (20ம் தேதி) மாலை 4:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. தொடர்ந்து, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகளும், மாலை 6:00 மணியளவில் கலச ஸ்தாபனம் செய்து, முதல் கால யாக சாலை பூஜை, இரவு 9:00 மணியளவில் பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடக்கிறது. நாளை (21ம் தேதி) அதிகாலை கோ பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, தத்துவார்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு, 9:15 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை வண்ணாத்துார் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.