ஜீவானந்தபுரத்தில் பவுர்ணமி பிரம்மோற்சவ விழா
ADDED :3502 days ago
புதுச்சேரி: உழவர்கரை ஜீவானந்தபுரம் ஜலமுத்து மாரியம்மன் கோவில் 43ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத் துடன் துவங்கியது. விழாவில், இன்று (20ம் தேதி) மகா அபிஷேகம், யாசாலை பூஜைகள் நடக்கிறது. 21ம் தேதி காலை 5:30 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 1:00 மணிக்கு பால் சாகை வார்த்தல், இரவு 7:00 மணிக்கு காத்தவராயனுக்கு கும்பம் படைத்தல், இரவு சுவாமி வீதி உலா நடக்கிறது. 22ம் தேதி மாலை 4:30 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், 23ம் தேதி விடையாற்றி உற்சவம், சுவாமி உள் புறப்பாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.