மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED :3502 days ago
எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கிறது. எருமப்பட்டி அடுத்த, பழனிநகர் பகுதி மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் தேர் திருவிழா நடக்கிறது. இந்த ஆண்டு விழா, கடந்த, 3ம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேகமும், ஆராதனைகளும் நடக்கின்றன. வரும், 25ம் தேதி மாலை மாரியம்மன் கோவில் முன்பாக பக்தர்கள் பூக்குழி இறங்குகின்றனர். மறுநாள் பொங்கல் வைத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 27ம் தேதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் நகர்வலம் வருகிறார்.