உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்

அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்

ஆலங்குடி: புதுகை மாவட்டம் ஆலங்குடி அங்காள பரமேஸ்வரி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவ விழா நடந்தது. விழாவையொட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன், முனீஸ்வரர், மாசாணி அம்மன் மற்றும் சப்த கன்னிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கோவிலில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நோயினால் அவதிப்படுபவர்கள், பில்லி சூன்யம் ஆகியவற்றில் இருந்து விடுதலை பெற என பல்வேறு வேண்டுதல்களுடன் அமாவாசை இரவு இக்கோவிலில் தங்கிச் சென்றால் வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். மாதந்தோறும் இரவில் இக்கோவிலில் தங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விழாவை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவ விழா நடந்தது. விழாவில், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !