உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

திருவண்ணாமலை:சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்; 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். கார்த்திகை தீப திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமி நாட்களின் போது, வழக்கமாக வரும் பக்தர்களை விட, கூடுதலாக, பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவர். இந்நிலையில், நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் கிரிவலம் சென்று, 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். தரிசன வரிசையில் நின்றிருந்த பக்தர்களுக்கு, குடிநீர், மோர், உப்பு சர்க்கரை கரைசல் போன்றவை வழங்கப்பட்டன. பாதுகாப்பு பணியில், 5,000 போலீசார் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !