உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரா பவுர்ணமி: ஆண்டாள் நாச்சியார் கோவிலில் சிறப்பு பூஜை!

சித்ரா பவுர்ணமி: ஆண்டாள் நாச்சியார் கோவிலில் சிறப்பு பூஜை!

உடுமலை: சித்ரா புவுர்ணமியை முன்னிட்டு ஆண்டாள் நாச்சியார் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன.  உடுமலை அருகே, குறிஞ்சேரியில் ஆண்டாள் நாச்சியார் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு பவுர்ணமி மற்றும் அமாவாசையன்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. நேற்று சித்ராபவுர்ணமியையொட்டி, சிறப்பு அபிேஷகம் நடந்தன. காலையில், சந்தனம், பன்னீர், திருநீறு, பால், பஞ்சாமிர்த்தம் உட்பட, 18 வகையான அபிேஷகம் செய்யப்பட்டது.  தொடர்ந்து ஆராதனையும், சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் படிக்கப்பட்டது. மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. இதனை தொடர்ந்து மாலை, திருவிளக்கு பூஜையும், குங்கும பூஜையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !