உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி பெருமாள் கோவிலில் திருக்கல்யாண விழா

பொள்ளாச்சி பெருமாள் கோவிலில் திருக்கல்யாண விழா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கரிவரதராஜ பெருமாள் கோவிலில், பிரமோற்சவ விழா நடந்து வருகிறது. கடந்த 12ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கிய விழா, 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடர்ந்தது. பல்வேறு சமூகத்தினர், அமைப்பினர் சார்பில், தினசரி சிறப்பு அலங்காரத்துடன், திருப்பல்லக்கு, திருவீதியுலா நடந்து வருகிறது. இதில் திருக்கல்யாண விழா நடைபெற்றது. தொடர்ந்து வரும் 23ம் தேதி வரை பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !